கென்னடி கிளப்
சசிகுமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு, ‘கென்னடி கிளப்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.;
சிறந்த கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வரும் டைரக்டர் சுசீந்திரன் தற்போது, ஏஞ்சலினா, சாம்பியன் ஆகிய படங்களை டைரக்டு செய்து வருகிறார். இதைத் தொடர்ந்து சசிகுமார், டைரக்டர் பாரதிராஜா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்க சுசீந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்த படத்துக்கு, ‘கென்னடி கிளப்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
சசிகுமார்-பாரதிராஜாவுடன் சூரி, முனீஸ்காந்த், மீனாட்சி, காயத்ரி, நீது, சவுமியா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தி பட வில்லன் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பெண்கள் கபடியை மையமாக வைத்து படம் தயாராகிறது. நிஜமான கபடி வீராங்கனைகள் பலரும் நடிக்கிறார்கள்.
பாண்டியநாடு, பாயும் புலி, மாவீரன் கிட்டு படத்துக்குப் பின், சுசீந்திரன்-டி.இமான் கூட்டணி, மீண்டும் இணை கிறது. குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். தாய் சரவணன் தயாரிக்கிறார்.
பழனியை கதைக்களமாக வைத்து படம் உருவாகிறது. வருகிற தமிழ் புத்தாண்டு அன்று படம் திரைக்கு வர இருக்கிறது.’’