சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
வசந்த் எஸ்.சாய் டைரக்ஷனில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ இதில் பார்வதி, காளஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.;
கேளடி கண்மணி, ஆசை, நேருக்கு நேர், பூவெல்லாம் கேட்டுப்பார், சத்தம் போடாதே உள்பட பல வெற்றி படங்களை டைரக்டு செய்தவர், வசந்த். இவர் தனது பெயரை, ‘வசந்த் எஸ்.சாய்’ என்று மாற்றிக்கொண்டு ஒரு புதிய படத்தை டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்துக்கு, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்று அவர் பெயர் சூட்டியிருக் கிறார்.
இதில் பார்வதி, காளஸ்வரி சீனிவாசன், லட்சுமி பிரியா சந்திரமவுலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய கதைக்கு, திரைக்கதை-வசனம்- டைரக்ஷன்-தயாரிப்பு ஆகிய பொறுப்புகளை வசந்த் எஸ்.சாய் ஏற்க, வைட் ஆங்கிள் ரவிஷங்கர், என்.கே.ஏகாம்பரம் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். ஸ்ரீசித்ரா டாக்கீஸ் என்ற நிறுவனம் சார்பில் படம் தயாராகி இருக்கிறது.
மும்பையில் நடைபெற இருக்கும் சர்வதேச பட விழாவில் திரையிடு வதற்காக, இந்த படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
படத்தை பற்றி டைரக்டர் வசந்த் எஸ்.சாய் கூறும்போது, “இது, பெண்கள் முன்னேற்றத்துக்காக குரல் கொடுக்கும்படம். சென்னை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் படம் வளர்ந்து இருக்கிறது” என்றார்.