இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு

அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.;

Update:2019-12-29 10:22 IST
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் இரண்டாவது தயாரிப்பான 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'

தினேஷ், ஆனந்தி நடிப்பில் பா.இரஞ்சித்தின் உதவியாளர் அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைத்திருக்கிறார். கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்த முதல் படமான பரியேறும் பெருமாள் படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது, இரண்டாவது தயாரிப்பான குண்டு திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் யூ சான்றிதழ் கொடுத்து படக்குழுவினரை பாராட்டி இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்