மஹா

சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல் படம் மஹா சினிமா முன்னோட்டம்.;

Update:2020-01-25 23:33 IST
ஹன்சிகா மோத்வானி நடிக்கும் ‘மஹா’ படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்டது. இந்த படத்தில், சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஒரு தகவல் பரவியது. “அது தவறான தகவல்” என்கிறார், ‘மஹா’ படத்தின் டைரக்டர் ஜமீல். இதுபற்றி அவர் கூறிய தாவது:-

‘மஹா படத்தில், சிம்புவின் கதாபாத்திரம், மிக முக்கிய மானது. ‘பிளாஷ்பேக்’ கதையில் அவர் 45 நிமிடங்கள் வருவார். படத்தில் அவர் விமானம் ஓட்டுகிற பைலட். கோவாவில் 10 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம்தான் கதை. அந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தை மிகுந்த கவனத்துடன் மெருகேற்றி இருக்கிறோம்.

முதலில் அவருடைய கதாபாத்திரத்துக்கு, ‘சாஹிப்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர் அந்த பெயர் மாற்றப்பட்டு, ஜமீல் என்று பெயர் வைத்து இருக்கிறோம். சிம்பு மாதிரி ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. படப்பிடிப்பு தளத்தில் முதல் ஆளாக இருக்கிறார். படப்பிடிப்பின்போது வெகு சிரத்தையுடன் அமைதியாக இருந்தார்.

அவருடைய நடிப்பு, நம்பிக்கையை தந்து இருக்கிறது. இந்த படத்தை தூக்கி நிறுத்துவதற்கு சிம்புவும் ஒரு காரணமாக இருப்பார். முதல் தோற்றத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு அதை உறுதி செய்து, படக்குழுவினருக்கு உற்சாகமூட்டி இருக்கிறது.”

மேலும் செய்திகள்