பிஸ்கோத்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஆர்.கண்ணன் டைரக்டு செய்து வந்தார். பெயர் சூட்டப்படாமலே இந்த படம் வளர்ந்து வந்தது. இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இந்த படத்துக்கு, ‘பிஸ்கோத்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.;

Update:2020-02-07 22:37 IST
‘பிஸ்கோத்’ படத்தில் சந்தானத்தின் 3 தோற்றங்கள் 2 ஜோடிகளுடன்
இதில், சந்தானம் 3 தோற்றங்களில் நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். இவர்களில் தாரா அலிஷா பெர்ரி, ‘ஏ 1’ படத்தில் ஏற்கனவே சந்தானம் ஜோடியாக நடித்து இருந்தார்.

மற்றும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்து இருக்கிறார். படத்தின் உலக வினியோக உரிமையை கே.ரவீந்திரன் பெற்றுள்ளார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் வளர்ந்துள்ளது. படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெற்று முடிவடைந்தது. ஐதராபாத்தில் சுமார் ஒன்றரை கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை அரங்கு போடப்பட்டு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது.

மேலும் செய்திகள்