கல்தா

செ.ஹரி உத்ரா இயக்கத்தில் ஆண்டனி, சிவ நிஷாந்த், அய்ரா, திவ்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் முன்னோட்டம்.;

Update:2020-02-28 01:46 IST
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் திரைப்படம் “கல்தா”. செ.ஹரி உத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் ஆண்டனி மற்றும் சிவ நிஷாந்த் ஹீரோக்களாக நடித்துள்ளனர். அவர்களுக்கு ஜோடியாக அய்ரா, திவ்யா ஆகியோர் நடித்துள்ளனர். ஜெய் கிரிஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு வைரமுத்து, வித்யாசாகர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் கமர்ஷியல்  படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

மேலும் செய்திகள்