யாக்கை திரி

‘யாக்கை திரி’ கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள முக்கோண காதல் கதை படத்தின் சினிமா முன்னோடம்;

Update:2021-01-27 22:05 IST
தமிழ் பட உலகில் இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வரத்தொடங்கி விட்டன. அந்த பட்டியலில் இடம்பெறும் புதிய படம், ‘யாக்கை திரி’. இது ஒரு முக்கோண காதல் கதை.

கதாநாயகன், பரத். சோனாக்ஷி சிங் ரவத், ஜனனி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சோனாக்ஷி சிங் ரவத், கொல்கத்தாவைச் சேர்ந்தவராக நடிக்கிறார்.

பிரதாப்போத்தன் அப்பா வேடத்தில் நடிக்கிறார். பகவதி பெருமாள், பாண்டியராஜன், சுதாசந்திரன், ஞானசம்பந்தம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பரத்மோகன் டைரக்டு செய்ய, எஸ்.சபரீஷ்குமார் தயாரிக் கிறார்.

இசைக்கும், காதலுக்கும் முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்துக்கு அரோல் கரோலி இசையமைக்கிறார். படத்தில் 4 பாடல்கள் இடம்பெறுகின்றன. நீண்ட நாட்களுக்குப்பின், பாம்பே ஜெயஸ்ரீ ஒரு பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் செய்திகள்