சில்லு வண்டுகள்
குழந்தைகளுக்காக ஒரு படம் ‘சில்லு வண்டுகள்’ படத்தின் முன்னோட்டம்.;
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு ‘சில்லு வண்டுகள்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. வாழ்க்கையில் உயர்வதற்கு கெட்ட வழிகளை பின்பற்றக் கூடாது என்ற கருத்தை சொல்லும் படம், இது.
இதில் புதுமுகங்களுடன் ஏராளமான குழந்தைகள் நடித்துள்ளனர். படத்தை தயாரிப்பதுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார், தி.கா.நாராயணன். படத்தை சுரேஷ் கே.வெங்கிடி இயக்கி இருக்கிறார். படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.