சிவ சிவா

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் இசையமைத்து நடிக்கும் ‘சிவ சிவா’ சினிமா முன்னோட்டம்.;

Update:2021-03-04 16:27 IST
‘பகவதி’ படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து திரையுலகுக்கு அறிமுகமான ஜெய், இசையமைப்பாளர் தேவாவின் தம்பி சம்பத்தின் மகன். ‘பகவதி’ படத்தில் விஜய் தம்பி வேடத்தில் நடித்த அவர், ‘சென்னை-28’ படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். சசிகுமார் இயக்கி நடித்த ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் பிரபலமானார்.

அவர் இதுவரை 30 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 30-வது படத்துக்கு, ‘சிவ சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகிய 3 பேர்களும் பாடல்களை எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருப்பவர், சுசீந்திரன்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்தில் ஜெய்யும், தெலுங்கு படத்தில் ஆதியும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.

மேலும் செய்திகள்