காதலும், திகிலும் கலந்த ‘உன் பார்வையில்’ என்ற படத்தில், கணேஷ் வெங்கட்ராம் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கஹானோ பியார் ஹை’, ‘பர்தேஷ்’, ‘தாள்’ போன்ற பாலிவுட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர்லால், இந்த படத்தை இயக்குகிறார்.
படப்பிடிப்பு டேராடூன், உத்ரகாண்ட் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, மராட்டி, பெங்காலி ஆகிய மொழிகளில் படமாகிறது. தமிழ் பதிப்பில் கணேஷ் வெங்கட்ராம், பார்வதி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக் கிறார்கள். காதல் திகில் படமாக உருவாகும் இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராம் மனோதத்துவ நிபுணராகவும், பார்வதி நாயர் தொழில் அதிபராகவும் நடிக்கிறார்கள். அஜய்சிங் தயாரிக்கிறார்.