டி கம்பெனி

5 மொழிகளில் வெளியாகிறது ராம்கோபாலின், ‘டி கம்பெனி’ சினிமா முன்னோட்டம்.;

Update:2021-03-04 21:49 IST
இந்திய திரையுலகின் பிரபல டைரக்டர்களில் ஒருவர், ராம்கோபால் வர்மா. அதிரடி சண்டை, அரசியல், குற்றப்பின்னணி என பல்வேறு பின்னணியில் படங்களை இயக்கியவர், இவர். தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களில் தனி முத்திரை பதித்த ராம்கோபால் வர்மா இப்போது, ‘டி கம்பெனி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக் கிறார்.

1993-ம் ஆண்டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராகிமை பற்றிய கதை, இது. மும்பை குண்டு வெடிப்பையும், தாவூத் இப்ராகிமின் டி கம்பெனியையும் இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பில்கேட்ஸ், அம்பானி போன்ற தொழில் அதிபர்களின் வாழ்க்கை வரலாறும் திரைக்கதையில் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. தாவூத் இப்ராகிம், சோட்டா ராஜன் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளிகள் சொன்ன உண்மை கதையின் அடிப்படையில், ‘டான்’ படத்தின் கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும், படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளிவர இருப்பதாகவும் ராம்கோபால் வர்மா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்