வியக்க வைத்த ஒளிப்பதிவாளர் - ஏ.ஆர்.அசோக்குமார்

‘காடன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ஏ.ஆர்.அசோக்குமார்.;

Update:2021-04-05 19:25 IST
பிரபு சாலமன் இயக்கத்தில், ராணா, விஷ்ணு விஷால் நடித்து வெளிவந்த ‘காடன்’ படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர், ஏ.ஆர்.அசோக்குமார். இவருக்கு முதல் படமே பெயர் சொல்லும் படமாக அமைந்து இருக்கிறது. பாராட்டுகள் வந்து குவிகின்றன.

அசோக்குமார், பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்சாவிடம், ‘மதராசபட்டினம்’, ‘சைவம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘வேட்டை’ உள்பட பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் சுகுமாரிடம், தர்மதுரை, ஸ்கெட்ச், கும்கி-2 ஆகிய படங்களில் உதவியாளராக இருந்தார். இப்போது, ‘அழகிய கண்ணே’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிகிறார்.

‘காடன்’ படத்தை பார்த்த நீரவ்சா, “இந்த காட்சிகளை எல்லாம் எப்படி எடுத்தாய்?” என்று கேட்டு வியந்தாராம்.

“காடுகளுக்குள் ஒளிப்பதிவு செய்தது, மாறுபட்ட அனுபவமாக இருந்தது. முதல் படமே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியானது பெரும் மகிழ்ச்சியை தருகிறது” என்கிறார், அசோக்குமார்.

மேலும் செய்திகள்