ஆனந்தம் விளையாடு
சேரன்-கவுதம் கார்த்திக்குடன் ‘ஆனந்தம் விளையாடு’ படத்தில் நட்சத்திர பட்டாளம்.;
சேரன், கவுதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடிக்கும் ‘ஆனந்தம் விளையாடு’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. படத்தின் இரண்டாவது கட்ட படப் பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது.
நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இந்த படத்தில் சேரன், கவுதம் கார்த்திக்குடன் சிவத்மிகா ராஜசேகர், விக்னேஷ், சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, சினேகன், நமோ நாராயணன், சவுந்தரராஜன், மவுனிகா, சுஜாதா, பிரியங்கா என பெரும் நட்சத்திர பட்டாளமே பங்கேற்று நடித்து வருகிறது. பி.ரங்க நாதன் தயாரிக்கிறார்.
குடும்ப உறவுகளை மையப்படுத்திய கதை, இது.
நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகள் கலந்து குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகி வருகிறது.