மாவட்ட செய்திகள்
ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி ரூ.1 லட்சம் திருட்டு

திருச்சியில் ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி, ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரியிடம் ரூ.1 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கே.கே.நகர், திருச்சி கே.கே.நகர் ரெங்கா நகரை சேர்ந்தவர் சேகர் (வயது58). இவர் மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், நேற்று முன்தினம் உறையூர் ராமலிங்கநகரில் உள்ள வங்கியில் ரூ.1 லட்சத்தை தனது கணக்கில் இருந்து எடுத்தார். அந்த பணத்தை ஒரு பையில் போட்டு மொபட்டில் உள்ள பெட்டியில் வைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.வீட்டின் முன்பு வந்ததும் மொபட்டை நிறுத்திவிட்டு சாவியை போட்டு இருக்கையின் கீழ் பகுதியை திறக்க முயன்றார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்தார். மற்றொரு நபர் நடந்து வந்தார். சாலையில் ரூ.100, ரூ.20 நோட்டுகள் சிதறி கிடப்பதாகவும், அந்த நோட்டுகள் உங்களுடையதா? என நடந்து வந்த வாலிபர் சேகரிடம் கேட்டார். இதனை கேட்ட அவர் மொபட்டில் சாவியை வைத்து விட்டு கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க சென்றார்.அந்த நேரத்தில் மர்ம நபர்கள், சேகரின் மொபட்டில் அவர் வைத்து சென்ற சாவி மூலம் பெட்டியை திறந்து அதில் பையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை திருடிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர். சேகர் கீழே கிடந்த ஒரு சில ரூபாய் நோட்டுகளை எடுத்துவிட்டு தனது மொபட்டின் அருகே வந்த போது பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் காணாதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மர்மநபர்கள், கீழே ரூபாய் நோட்டுகளை சிதற விட்டு கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.வங்கியில் சேகர் பணத்தை எடுத்தது முதல் அவர் வீட்டிற்கு மொபட்டில் வரும் வரை மர்ம நபர்கள் நோட்டமிட்டு பின்தொடர்ந்து வந்து தங்களது கைவரிசையை காட்டியது தெரியவந்தது. அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அதில் காட்சிகள் தெளிவாக இல்லாதது தெரிந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது; 40 பவுன் நகை மீட்பு
பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 46 பவுன் நகைகளையும் மீட்டனர்.
2. கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரம் திருட்டு
ஸ்ரீமுஷ்ணத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. திருட்டு வழக்கில் தொடர்புடைய துணை நடிகர் மனைவியுடன் கைது, 15 பவுன் நகை பறிமுதல்
கோவையில் நகை பறிப்பு, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய துணை நடிகர் மற்றும் அவருடைய மனைவியை போலீசார் கைது செய்தனர்.
4. மதுரையில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்: மாநகராட்சி கமி‌ஷனரிடம், அழகிரி சார்பில் மனு
மதுரையில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று மு.க.அழகிரி சார்பில் அவருடைய ஆதரவாளர்கள் மாநகராட்சி கமி‌ஷனரிடம் மனு கொடுத்தனர்.
5. தேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் கண்மாய்களில் மணல் திருட்டு, விவசாயிகள் குற்றச்சாட்டு
தேவகோட்டை பகுதியில் குடிமராமத்து என்ற பெயரில் விதிமுறைகளை மீறி கண்மாய்களில் மணல் திருட்டு நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.