மாவட்ட செய்திகள்
பாபநாசம் வனப்பகுதியில்குட்டிகளுடன் செல்லும் கரடி உருவம் கேமராவில் பதிவானது

பாபநாசம் வனப்பகுதியில் குட்டிகளுடன் செல்லும் கரடி உருவம் கேமராவில் பதிவானது.
விக்கிரமசிங்கபுரம், 

பாபநாசம் வனப்பகுதியில் குட்டிகளுடன் செல்லும் கரடி உருவம் கேமராவில் பதிவானது.

கரடி உருவம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில், புலி, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், பல்வேறு இடங்களில் ஆட்டோமெட்டிக் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பாபநாசம் வனச்சரக பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்குள்ள கேமராக்களில் குட்டிகளுடன் செல்லும் கரடி, குட்டியை சுமந்தபடி செல்லும் கரடி உருவம் பதிவாகி உள்ளது. அவற்றை வனத்துறையினர் நேற்று வெளியிட்டனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

இதற்கிடையே, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவுப்படி, அம்பை துணை இயக்குனர் பார்கவதேஜா அறிவுரைப்படி, பாதுகாப்பு கருதி பாபநாசம் வனப்பகுதியில் உள்ள வனத்துறை சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

மேலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வனப்பகுதிக்குள் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர மேலும் பல்வேறு வரைமுறைகளை செயல்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.