மாவட்ட செய்திகள்
புத்தக விளக்கு

மின் பொருள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜி.இ. நிறுவனம் புத்தகம் படிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த விளக்கை வடிவமைத்துள்ளது.
ரெயில், விமான பயணம் மேற்கொள்வோர் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படாத வகையில் புத்தகம் படிக்க இந்த விளக்கு உதவும். நீங்கள் படிக்கும் புத்தகத்தின் மீது விளக்கு வெளிச்சம் விழும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சத்தின் அளவை கூட்டவும், குறைக்கவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். எல்.இ.டி. திரையுடன் பிளாஸ்டிக்கில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் இதன் எடையும் குறைவாகும்.