மாவட்ட செய்திகள்
அன்னை தெரசா நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து நாராயணசாமி மரியாதை

புதுவை பாரதி பூங்காவில் உள்ள அன்னை தெரசாவின் சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி,புதுவை அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் அன்னை தெரசாவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.