மாவட்ட செய்திகள்
நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்பு போலீசார் விசாரணை

திருத்துறைப்பூண்டி அருகே நாய்கள் கடித்து குதறிய நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி,

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுபாளையம் நாலாநல்லூர் நத்தம் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வீசப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன், சப்-இன்ஸ்பெக்டர் வல்லவராணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றினர். அப்போது குழந்தையின் உடலை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையை நாய்கள் கடித்து குதறியதால் கால் மற்றும் இடுப்பு பகுதி உள்ளிட்டவைகள் முற்றிலுமாக சிதைந்து கிடந்தன. இதனால் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் குழந்தையை வெளியூரில் இருந்து யாராவது வந்து வீசி சென்றார்களா? அல்லது பெற்ற தாயே குழந்தையை வீசினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் குழந்தையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விளக்குடி கிராம நிர்வாக அலுவலர் வினோத் திருத்துறைப்பூண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம்: வழக்கில் சிக்கிய 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
2. சிவகங்கை அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர், போலீஸ் விசாரணை
சிவகங்கை அருகே ரெயில் தண்டவாளத்தில் பட்டதாரி வாலிபர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3. சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு
சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
4. மொயீன் அலியை ‘ஒசாமா’ என்று ஆஸ்திரேலிய வீரர் விமர்சித்ததாக புகார் கிரிக்கெட் வாரியம் விசாரணை
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
5. மதுரை விமான நிலையத்தில் கட்டு கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல், 5 பேரிடம் விசாரணை
மதுரை விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேரை பிடித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.