மாவட்ட செய்திகள்
பெங்களூரு புறநகர்-துமகூருவில் விபத்துகள்: மருத்துவ மாணவர்கள் உள்பட 7 பேர் சாவு

பெங்களூரு புறநகர், துமகூருவில் நேற்று நடந்த வெவ்வேறு விபத்துகளில் மருத்துவ மாணவர்கள் உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
பெங்களூரு,

துமகூரு மாவட்டம் துமகூரு-சிரா நெடுஞ்சா லையில் தரூர் கேட் அருகே நேற்று அதிகாலையில் லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. இதையடுத்து ‘கிரேன்’ வாகனம் வரவழைக்கப்பட்டு, லாரியை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த வேளையில், அந்த சாலையில் வேகமாக வந்த ஆம்னி வேன், ‘கிரேன்’ வாகனம் மீது மோதியது. இதில் ஆம்னிவேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் கல்லம்பெல்லா போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து அந்தப்பகுதி மக்களுடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆம்னிவேனில் பயணித்த 4 பேர் உடல் நசுங்கி இறந்ததும், 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடுவதும் தெரியவந்தது.

இதையடுத்து படுகாய மடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத் தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இறந்தவர் களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், இறந்தவர்கள் யார்? என்பது அடையாளம் காணப்பட்டது. அதாவது, பெங்களூரு கித்தனஹள்ளியை சேர்ந்த சசிகுமார் (வயது 28), ஹேமந்த் குமார் (26), கிரண் (25), கிடதபாளையாவை சேர்ந்த வெங்கடேஷ் (25) ஆகியோர் படுகாயம் அடைந்து இறந்ததும், கித்தனஹள்ளியை சேர்ந்த பிரஜ்வெல் (22), அனில் குமார், மல்லசந்திராவை சேர்ந்த அசோக் (25) ஆகியோர் காயமடைந்து இருப்பதும் தெரியவந்தது இவர்கள் பெங்களூருவில் இருந்து மரிகனிவே பகுதிக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் சிக்கி பலியானது தெரியவ ந்துள்ளது. இதுகுறித்து கல்லம்பெல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா சன்ன அமானி கெரேயில் நேற்று அதிகாலையில் லாரி ஒன்று பழுதடைந்து சாலையோரம் நின்றது. அப்போது, அந்த சாலையில் வேகமாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியது. லாரியில் இருந்த இரும்பு கம்பிகள் கார் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்தன. இரும்பு கம்பிகள் குத்தியும், இடுபாடுகளில் சிக்கியும் காரில் பயணித்த பெங்களூரு ஜிகினியை சேர்ந்த பூஷன் (21), தொட்டபெலவங்களாவை சேர்ந்த விஷால் (21), துமகூருவை சேர்ந்த பிரஜ்வெல் (21) ஆகியோர் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர்.

இவர்கள் 3 பேரும் பெங்களூரு ‘கிம்ஸ்’ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ படிப்பு படித்து வந்ததும், கல்லூரி நண்பரான குமார்ராஜ், அவர்கள் 3 பேரையும் தனது வீட்டுக்கு காரில் அழைத்து சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர் குமார்ராஜ் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.