மாவட்ட செய்திகள்
கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடியில் புதிய சாலை அமைக்கும் பணி அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்

கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
கயத்தாறு, கடம்பூர்–குருமலை இடையே ரூ.2.43 கோடி செலவில் புதிய சாலை அமைக்கும் பணியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.புதிய சாலை தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் இருந்து குருமலை வரை 7.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ரூ.2 கோடியே 43 லட்சத்து 8 ஆயிரம் செலவில் புதிய சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று காலையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புதிய சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தமிழக அரசு தினமும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது. தற்போது கடம்பூர்–குருமலை இடையே புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. அதேபோன்று குருமலை–கோவில்பட்டி இடையே 21 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை மூலம் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.பஸ் நிறுத்த நிழற்குடை பின்னர் கடம்பூர் அருகே சொக்கலிங்கபுரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் செலவில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், யூனியன் ஆணையாளர்கள் முத்துகுமார், சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன், கடம்பூர் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் நாகராஜா, கயத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து துணை தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மாவட்டத்தில் 1,720 கர்ப்பிணிகளுக்கு சீதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
மாவட்டத்தில் இந்த ஆண்டு 1,720 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தி சீதன பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.
2. சம்பளம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் டி.டி.வி.தினகரன் - அமைச்சர் செல்லூர் ராஜூ
50 ஆயிரம் பேருக்கு சம்பளம் கொடுத்து கூட்டத்தை கூட்டுகிறார் டி.டி.வி.தினகரன் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
3. வரத்துகால்வாயை சீரமைத்து சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை
பழமைவாய்ந்த சிவகங்கை தெப்பக்குளத்திற்கு பெரியாற்று தண்ணீர் கொண்டு வரும் வகையில் வரத்துக்கால்வாயை சீரமைத்து அமைச்சர் பாஸ்கரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
4. பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது’ என்று கோவையில் நடந்த விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
5. சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் அரசு விழா: 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள்
சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் 860 பேருக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.