மாவட்ட செய்திகள்
மனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு சாவு

சொத்து பிரச்சினை காரணமாக மனைவி தற்கொலையால் மனமுடைந்த கண்டக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ராணி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). அரசு பஸ் கண்டக்டர். இவரது மனைவி கோமதி. கடந்த 4-ந்தேதி சொத்து பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் மனமுடைந்த பிரேம்குமார் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேம்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர் அருகே மனைவி தற்கொலை செய்துகொண்ட மறுநாளே தூக்கில் தொங்கிய தொழிலாளி
அந்தியூர் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட மறுநாளே தொழிலாளி தூக்கில் தொங்கினார்.