மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில்மூலிகை கிட்டங்கியில் பயங்கர தீவிபத்து

தூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் மூலிகை கிட்டங்கி தீப்பிடித்து எரிந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலிகைகள் தீயில் கருகி சேதமடைந்தன.

மூலிகை கிட்டங்கி

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருடைய மகன் ஜெயராஜ்(வயது 65). இவருக்கு சொந்தமான கிட்டங்கி தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் உள்ளது. இங்கு அவுரி, கண்டங்கத்திரி உள்ளிட்ட மூலிகையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உலர்த்தி மூடையாக வைத்து இருந்தனர்.

தீவிபத்து

நேற்று மாலையில் அந்த கிட்டங்கியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. இதில் கிட்டங்கியில் உலர்த்தி வைக் கப்பட்டு இருந்த பெரும்பாலான மூலிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். பக்கத்து இடங்களுக்கு தீ பரவாமலும் தடுத்தனர். மேலும் அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மரிலும் தீ பரவாமல் தடுத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.