மாவட்ட செய்திகள்
கோவில்பட்டி கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

கோவில்பட்டி கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
கோவில்பட்டி, 

கோவில்பட்டி கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு 

கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. அப்போது அங்கு வந்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் கோர்ட்டை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் ஒரு வழக்கில் சமரசம் காணப்பட்ட உத்தரவினை மனுதாரர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா வழங்கினார்.

பின்னர் கோவில்பட்டி கோர்ட்டு வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்படவுள்ள இடத்தினை ஐகோர்ட்டு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாரயணா, அப்துல் குத்தூஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள், கோவில்பட்டி–கடலையூர் ரோடு பங்களா தெருவில் உள்ள முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு குடியிருப்பு வளாகத்தில், நீதிபதி குடியிருப்புகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கலந்து கொண்டவர்கள் 

மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன், சப்–கோர்ட்டு நீதிபதிகள் செல்வம் (தூத்துக்குடி), பாபுலால் (கோவில்பட்டி), உரிமையியல் நீதிபதி நிஷாந்தினி, முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சங்கர், 2–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தாவூது அம்மாள், துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், தாசில்தார் பரமசிவன், அரசு வக்கீல் சந்திரசேகரன், வக்கீல் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.