மாவட்ட செய்திகள்
ரெயிலில் அடிபட்டு டிரைவர் சாவு - போலீசார் விசாரணை

மோகனூர் அருகே ரெயிலில் அடிபட்டு டிரைவர் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோகனூர்,

நாமக்கல் மாவட்டம் காவேட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). கார் டிரைவர். இந்த நிலையில் நேற்று மோகனூர் அருகே லத்துவாடி பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்கள் இது தொடர்பாக மோகனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், இது குறித்து சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர அவர்கள் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவியும், 3 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப் பாலம் கட்டப்படும் - ரெயில்வே அதிகாரி பேட்டி
பாம்பனில் புதிய ரெயில்வே தூக்குப்பாலம் கட்டப்படும் எனவும் இந்த பணி ஒரு வருடத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ரெயில்வே கட்டுமான பிரிவு செயல் இயக்குனர் தெரிவித்தார்.
2. சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம்: வழக்கில் சிக்கிய 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு
விநாயகர் சிலை ஊர்வலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
3. பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து சம்பவம் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலி
நெல்லையில் அடுத்தடுத்த சம்பவங்களில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பலியானார்கள்.
4. சிவகங்கை அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர், போலீஸ் விசாரணை
சிவகங்கை அருகே ரெயில் தண்டவாளத்தில் பட்டதாரி வாலிபர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5. சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கலுக்கு பிறகும் விசாரணை, கலெக்டரிடம் புகார் மனு
சசிகுமார் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.