மாவட்ட செய்திகள்
பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உருவப்பொம்மை எரிப்பு

நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி நடிகர் பிரகாஷ்ராஜ், எழுத்தாளர் கிரீஸ் கர்னாட்டின் உருவப்பொம்மையை எரித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பெண் பத்திரிகையாளரான கவுரி லங்கேசை கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் 5-ந் தேதி மர்மநபர்கள் சுட்டுக்கொன்றனர். இந்த நிலையில் கவுரி லங்கேசின் ஓராண்டு நினைவு தினத்தையொட்டி பெங்களூருவில் நடந்த பேரணியில் நடிகர் பிரகாஷ்ராஜ், பிரபல எழுத்தாளர் கிரீஸ் கர்னாட் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் போது கிரீஸ் கர்னாட் நான் ஒரு நகர நக்சலைட்டு என்ற பதாகையை கையில் வைத்து கொண்டு வந்தார். அதுபோல நடிகர் பிரகாஷ்ராஜிம் கையில் பதாகையை கையில் வைத்து கொண்டு சென்றார். இந்த நிலையில் நக்சல்களை ஊக்குவிப்பதாக கூறி பிரகாஷ்ராஜ், கிரீஸ் கர்னாட்டை கண்டித்து நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் டவுனில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பிரகாஷ் ராஜ், கிரீஸ் கர்னாட்டின் உருவ பொம்மைகளுக்கு பா.ஜனதாவினர் தீ வைத்து எரித்தனர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரபேல் விவகாரம்: விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் முறையிட காங்கிரஸ் முடிவு
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் விசாரணை நடத்தக்கோரி சிஏஜியிடம் காங்கிரஸ் இன்று மனு அளிக்க உள்ளது.
2. 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி சாவு; நர்ஸ் கைது
உசிலம்பட்டி அருகே 4–வதும் பெண் குழந்தை என கருதி கருக்கலைப்பு செய்த கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவருக்கு கருக்கலைப்பு செய்த நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
3. விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
விடுதியில் அடிப்படை வசதிகள் செய்ய கோரி வகுப்புகளை புறக்கணித்து அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. எச்.ராஜாவை கண்டித்து ஈரோட்டில் இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டம்
ஈரோட்டில் எச்.ராஜாவை கண்டித்து இந்து சமய அறநிலையத்துறையினர் அலுவலக புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. சிறை கைதிகளை விடுவிக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் தொடர் முழக்க போராட்டம்
10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் தொடர் முழக்க போராட்டம் நடத்தினர்.