மாவட்ட செய்திகள்
கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை மூலமாக கூட்டணி தலைவர்களுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில்காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். அவரது வீடு மற்றும் அவருடைய ஆதரவாளர்களில் வீடுகளில் கடந்த ஆண்டு(2017) வருமானவரித்துறைஅதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். டெல்லியில் உள்ளடி.கே.சிவக்குமார், அவரது ஆதரவாளர்களுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.8கோடி சிக்கியது. இதுதொடர்பாகஅமலாக்கத்துறையினர்மந்திரிடி.கே.சிவக்குமார்மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைதுசெய்யஇருப்பதாக தகவல்கள்வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:- கர்நாடக அரசியல் நிலவரம் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தினமும் சதிநடப்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். இது எங்கு சென்று முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சிகளை ஒழிக்க மத்திய அரசு வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி வருகிறது. இதன்மூலம் அவர்கள் என்ன லாபம் அடைய போகிறார்கள் என்பது தெரியவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆரம்பத்தில் இருந்தே சிலர் முயன்று வருகிறார்கள். அதில், அவர்கள் வெற்றி பெற போவதில்லை. இந்தஆட்சியை கவிழ்க்ககூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது. கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறார்கள். மந்திரி டி.கே.சிவக்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய முன்வந்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முழு்அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. வருகிற 10-ந்தேதி (அதாவது நாளை) நடைபெறும் முழு அடைப்புக்கு ஜனதாதளம் (எஸ்) கட்சி முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.மேலும் பா.ஜனதா தேசிய செயற்குழுகூட்டத்தில் கலந்து கொள்ளாமல் எடியூரப்பா டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு திரும்பியது குறித்து குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு பதிலளித்த  முதல்-மந்திரி குமாரசாமி, ‘‘கூட்டணிஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்-மந்திரியாக பதவி ஏற்க அவசரமாக எடியூரப்பா வந்திருக்கலாம் என்றார்.