மாவட்ட செய்திகள்
தீ விபத்தில் குடிசையை இழந்தவருக்கு நிவாரண உதவி

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள இலந்தைகூடம் கிராமத்தில் நேற்று முன்தினம் எதிர்பாராதவிதமாக பிச்சைப்பிள்ளை(வயது 35) என்பவரது குடிசை தீப்பிடித்து எரிந்தது.
திருமானூர்,

தீ விபத்தில் வீட்டில் இருந்த அனைத்து உடைமைகளும் எரிந்து சாம்பலாயின. இந்நிலையில் தீ விபத்தில் குடிசையை இழந்த பிச்சைப்பிள்ளை குடும்பத்தினருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில், நிவாரண தொகை மற்றும் பொருட்களை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நேற்று வழங்கி ஆறுதல் கூறினார்.

மேலும் அரசு வீடு கட்டி தருவதற்கான ஆணையையும் வழங்கினார். அப்போது ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ., கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் குமரவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.