மாவட்ட செய்திகள்
கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் மீட்பு

கடல் கொந்தளிப்பால் பாம்பன் குந்துகால் கடல் பகுதியில் மூழ்கிய மிதவைக்கப்பல் பாதுகாப்பாக மீட்கப்பட்டது
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிதாக ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கான பணி கடந்த 2 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மேலும் துறைமுகம் கட்டும் பணியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒரு மிதவைக்கப்பல் ஈடுபட்டு வந்தது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுகு முன்பு பாம்பன் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாலும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த மிதவைக்கப்பல் கடலில் மூழ்கியது. கடலில் மூழ்கிய கப்பலை ரப்பர் மிதவை மூலமும், நாட்டுப்படகு மீனவர்கள் உதவியுடனும் மீட்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மிதவைக் கப்பல் நேற்று மீட்கப்பட்டு குந்துகால் கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பல் சரி செய்யப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அறச்சலூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின
அறச்சலூர் அருகே தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின. அதை பொதுமக்கள் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
2. அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 7 குடும்பத்தை சேர்ந்த 31 பேர் மீட்பு
அந்தியூர் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வேலை செய்த 7 குடும்பத்தை சேர்ந்த 31 பேரை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
3. ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி எலும்புக்கூடாக மீட்பு
ஆண்டிப்பட்டி அருகே மாயமான மூதாட்டி வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
4. 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பூனைக்குட்டி உயிருடன் மீட்பு
கோவையில் 80 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் விழுந்த பூனைக்குட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்.
5. சோழவந்தான் அருகே பாசன கால்வாய் நீரில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
மதுரை சோழவந்தான் அருகே பாசன கால்வாயில் மோட்டார்சைக்கிள் பாய்ந்ததில் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கிராமமக்கள் மீட்டனர்.