மாவட்ட செய்திகள்
கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு

கோத்தகிரியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் சப்–கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்ய விரும்புவோரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கேர்பெட்டா, அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் 13 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த சிறப்பு முகாமை சப்–கலெக்டர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தாசில்தார் ரவிக்குமார் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.