மாவட்ட செய்திகள்
எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடி: கட்டிட உரிமையாளர் மீது வழக்கு

காரைக்குடி அருகே எலக்ட்ரிக்கல் கடைகாரரிடம் ரூ.22½ லட்சம் மோசடியில் ஈடுபட்ட கட்டிட உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காரைக்குடி,காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகர் திரு.வி.க.நகரில் வசித்து வருபவர் அபிமன்யு படேல்(வயது 33). இவர் காரைக்குடி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ரத்தினம் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். அபிமன்யு படேல் தனது கடையை விரிவுப்படுத்தும் வகையில் கடையின் மேல் தளத்தில் கூடுதலாக ஒரு கடை கட்டி தரும்படி ரத்தினமிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் கட்டிடத்தை கட்டிக் கொள்ளுங்கள் என்றும், அதற்கான செலவு தொகையை பின்னர் தருவதாகவும் கூறியுள்ளார்.இதனையடுத்து அபிமன்யு படேலும் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டிடம் கட்டியுள்ளார். கடை கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான செலவு தொகை ரூ.22½ லட்சத்தை தருமாறு ரத்தினமிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தரமறுத்ததுடன், அந்த கட்டிடத்தை வேறு ஒரு நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதுகுறித்து கேட்டபோது அபிமன்யு படேலை ஆபாசமாக பேசி கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ரத்தினம் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.