மாவட்ட செய்திகள்
காஞ்சீபுரத்தில் பலத்த மழை

காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரத்தில் வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். இரவில் வீடுகளில் புழுக்கத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை காஞ்சீபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

இதனால் கடந்த சில நாட்களாக நிலவிய வெப்பம், சற்று தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.