மாவட்ட செய்திகள்
பங்கு வர்த்தக நிறுவனத்தில் அதிகாரி வேலை

தேசிய பங்கு வர்த்தக பாதுகாப்பு வாரியம் சுருக்கமாக ‘செபி’ எனப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் ‘கிரேடு-ஏ’, தரத்திலான அதிகாரி பணிக்கு 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பொது பிரிவில் 84 பேரும், சட்டப் பிரிவில் 18 பேரும், ஐ.டி. பிரிவில் 8 பேரும், சிவில் பிரிவில் 5 பேரும், எலக்ட்ரிக்கல் பிரிவில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.

சி.ஏ., சி.எஸ்., சி.டபுள்யு.ஏ., முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பொதுப் பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம். சட்டம், ஐ.டி., சிவில், எலக்ட்ரிக்கல் பட்டப்படிப்பு படித்தவர்கள் அந்தந்த பிரிவு பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 31-8-2018-ந் தேதியில், 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு, ஆன்லைன் தேர்வு நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விருப்பமுள்ளவர்கள் ரூ.850 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.100 கட்டணம் செலுத்தினால் போதுமானது. இதற்கான இணையதள விண்ணப்பம் 15-9-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். விண்ணப்பிக்கும் கடைசி நாள் மற்றும் இதர தேர்வு விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். இது பற்றிய விரிவான விவரங்களை https://www.sebi.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம். 

தொடர்புடைய செய்திகள்