மாவட்ட செய்திகள்
சிறுமியை கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது

செய்யாறு அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
செய்யாறு,

லாரி டிரைவர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா பில்லாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 35), லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது உறவினர் வீட்டில் தனிமையில் இருந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி நடந்தவற்றை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட விநாயகம் தொடர்ந்து பலமுறை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மகளிடம் கேட்டபோது அவர் நடந்தவற்றை கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் விநாயகத்திடம் சென்று தனது மகளை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டனர். அதற்கு விநாயகம், திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ‘போக்சோ’ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விநாயகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவர் கைது
சாத்தான்குளம் அருகே காதலிக்குமாறு தொந்தரவு செய்து கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2. ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடு புகுந்து திருடிய கொள்ளையன் கைது; 40 பவுன் நகை மீட்பு
பவானி, சித்தோடு, அம்மாபேட்டை பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 46 பவுன் நகைகளையும் மீட்டனர்.
4. அரியானா இளம்பெண் கற்பழிப்பு; 3 முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் கைது
அரியானாவில் இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 3 முக்கிய குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. சென்னையில் தடை செய்த பகுதியில் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 40 பேர் கைது
சென்னையில் தடை செய்த பகுதியில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் 40 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.