சிவகங்கையை ஆண்ட ராணி வேலுநாச்சியார் பிறந்த தினம் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போரை தொடங்கிய சிவகங்கையை ஆண்ட ராணி வேலுநாச்சியார் பிறந்த தினத்தையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மணிகண்டன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வேலு நாச்சியார் பிறந்த நாள் இந்திய விடுதலைப்

Update: 2017-01-03 23:00 GMT

சிவகங்கை,

ஆங்கிலேயர்களை எதிர்த்து முதல் சுதந்திர போரை தொடங்கிய சிவகங்கையை ஆண்ட ராணி வேலுநாச்சியார் பிறந்த தினத்தையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மணிகண்டன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வேலு நாச்சியார் பிறந்த நாள்

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடி வெற்றி பெற்றவரான சிவகங்கையை ஆண்ட வீரமங்கை ராணி வேலுநாச்சியாரை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சிவகங்கையை அடுத்த பையூரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைத்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாள் அரசு விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி நேற்று வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவு மண்டபத்தில் உள்ள உருவச் சிலைக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன், கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மலர்விழி, சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடி மற்றும் சிவகங்கை இளையமன்னர் மகேஸ்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோ, ஆவின் பால்வளத் தலைவர் சண்முகம், மாநில பாம்கோ தலைவர் கே.கே.உமாதேவன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் முருகானந்தம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரன், கற்பகம் இளங்கோ, நகர செயலாளர் ஆனந்தன், தாசில்தார் நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீதாலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் (செய்தி) கருப்பண ராஜவேல் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதேபோல் வீரமங்கை வேலுநாச்சியார் பேரவை சார்பில் கோபால், துரை, மணிமுத்து, சுப்பிரமணியன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்