கொல்லிமலை நீரோடைகளில் ஆக்கிரமிப்பு தடுப்புகளால் ஏரிக்கு நீர்வரத்து துண்டிப்பு
கொல்லிமலை நீரோடைகளில் ஆக்கிரமிப்பு தடுப்புகளால் ஏரிக்கு நீர்வரத்து துண்டிப்பு, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார்;
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சுப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தரப்பில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-
விவசாயி சுந்தரம்:- ஜவ்வரிசியில் மக்காச்சோளம் கலப்படம் செய்வதால், மரவள்ளி பயிருக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் ஜவ்வரிசி ஆலைகளில் தொடர் ஆய்வுகளை நடத்தி கலப்படம் செய்யும் ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராசிபுரம் தாலுகா நாச்சிப்புதூர் ஏரிக்கு கொல்லிமலையில் இருந்து வரும் மூன்று வரத்து வாய்க்கால்களும் ஆக்கிரமிப்புகளால் தண்ணீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் தடையின்றி ஏரிக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மெய்ஞான மூர்த்தி:- வண்டல் மண் எடுக்க யாரிடம் அனுமதி பெற வேண்டும். அந்த வருவாய் கிராமத்தில் மட்டும் தான் மண் எடுக்க வேண்டுமா?
கலெக்டர்:- வண்டல் மண் எடுக்க கிராம நிர்வாக அலுவலர் மூலம் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும். வேறு கிராமத்தில் உள்ள ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளிப்பது குறித்து சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தாசில்தார் முடிவு செய்வார்.
பெருமாள்:- பொதுமக்கள் எதிர்ப்பை மீறி மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் எடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இங்கு மணல் குவாரி அமைக்கப்பட்டால் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்படும். இதனால் இங்கு மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
பூபாலன்:- கூட்டுறவு வங்கிகளில் ஒவ்வொரு பயிருக்கும் நிர்ணயிக்கப்பட்ட கடன் அளவை காட்டிலும் குறைவான தொகையே கடனாக வழங்கப்படுகிறது. ஏரி,குளங்களில் விவசாய பணிகளுக்கு வண்டல் மண் அல்லது வேறு வகையான மண்ணையும் எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். சேந்தமங்கலம் பகுதியில் விவசாய மின் மோட்டார்களில் இருந்து வயர்கள் திருட்டு போவதை தடுக்க வேண்டும். வயர் திருட்டில் தொடர்புடையர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நல்லாகவுண்டர்:- நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை விவசாயிகளை கணக்கெடுத்து, அவர்களுக்கு பயிர் சாகுபடி குறித்து சிறப்பு பயிற்சி மற்றும் மானிய உதவிகளை வழங்க வேண்டும்.
பள்ளிபாளையம் தனியார் சர்க்கரை ஆலையில் வெளி மாவட்டங்களில் இருந்து பதிவு செய்யாத கரும்பை டன் ரூ.3 ஆயிரத்து 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர், ஆலையில் பதிவு செய்துள்ள விவசாயிகளின் கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 750 வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளபோதிலும், டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 250-க்கு மேல் தர மறுக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகள் மற்றும் ஆலை நிர்வாகத்திற்கு இடையேயான பிரச்சினைகள் குறித்து பேச மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
ஜெயமணி:- உலர் தீவனம் கேட்டு பதிவு செய்து உள்ளவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடை அளவுக்கு முழுமையாக தீவனம் வழங்க வேண்டும்.
கலெக்டர்:- பதிவு செய்து உள்ளவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட எடை அளவுக்கு உலர் தீவனம் வழங்கப்படுகிறது. மேலும் விரைவில் 100 டன் அளவுக்கு உலர் தீவனம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நடேசன்:- திருச்செங்கோடு அம்மா குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது. மேலும் இந்த குளத்தின் அருகில் உள்ள கிணறுகளில் இருந்து தான் திருச்செங்கோடு நகருக்கு 20-க்கும் மேற்பட்ட லாரிகள் இரவு, பகலாக குடிநீர் எடுத்துச்செல்கின்றன. இங்குள்ள சாய ஆலைகள் இரவு நேரத்தில் சாயக்கழிவுகளை அம்மா குளத்தில் திறந்து விடுவதை தடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
மோகனூர் அருகே ஒருவந்தூர் காவிரி ஆற்றில் மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த பிரச்சினையை குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் எழுப்பி கூட்ட அரங்கில் போராட்டம் நடத்தக்கூடும் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராமசாமி கூட்டத்தில் கலந்து கொண்டார். நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் கூட்ட அரங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.