பிளாஸ்டிக் கழிவுகளின் ஆதிக்கம் அதிகரிப்பு, ஊட்டி படகு இல்லத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
மீன்கள் இறக்கும் அபாயம், பிளாஸ்டிக் கழிவுகளின் ஆதிக்கம் அதிகரிப்பு, ஊட்டி படகு இல்லத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?;
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி சுற்றுலா நகரமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், ரோஜா பூங்கா ஆகிய இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் 1823-ம் ஆண்டு அன்றைய கலெக்டர் ஜான் சல்லீவன் மூலம் ஊட்டி ஏரி உருவாக்கும் பணி தொடங்கப்பட்டு, 1825-ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டு ஏரியில் படகு சவாரி தொடங்கப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இந்த ஏரிக்கு வரும் நீர் சுத்தமானதாக இருந்ததால், ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் ஏரியாக விளங்கியது. 1850-ம் ஆண்டு ஊட்டி கோடப்பமந்து கால்வாய் வழியாக விவசாய நிலங்களில் அடித்து வரப்படும் மண் கழிவுகள் ஏரியில் கலந்ததால் நாளடைவில் இந்த ஏரியின் தூய்மை அழிந்து சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடமாக மாறியது.
கடந்த 1850-ம் ஆண்டு ஊட்டி மத்திய பஸ் நிலையம் பின்பகுதியில் இருந்து காந்தல் முக்கோணம் பகுதி வரை இந்த ஏரி 70 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்டது. பின்னர் காலப்போக்கில் ஏரியின் பரப்பளவு குறைந்து, தற்போது சுமார் 25 ஏக்கர் பரப்பளவை கொண்டு உள்ளது. மேலும் மத்திய பஸ் நிலையத்தின் பின்பகுதி மண் திட்டாக மாறியதால், அந்த பகுதி சிறுவர் பூங்காவாக மாற்றப்பட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் குழந்தைகள் விளையாடும் இடமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இந்த பூங்காவை தனியாருக்கு பல கோடி ரூபாய்க்கு ஏலம் விட்டதால், அந்த இடம் தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு இடமாக தற்போது மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் ஊட்டி ஏரி பகுதியில் படகு சவாரி செய்யும் நீர் பரப்பை தவிர, மற்ற பகுதிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. தற்போது படகு இல்லத்தில் ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் ரூ.12-ம், 10 இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் பயணம் செய்ய ரூ.680-ம், 4 இருக்கைகள் கொண்ட மிதி படகில் பயணம் செய்ய ரூ.260-ம், 5 இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் பயணம் செய்ய ரூ.300-ம் கட்டணமாக சுற்றுலா பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது. தற்போது படகு இல்லத்தில் 80 மோட்டார் படகுகளும், 90 மிதி படகுகளும், 10 துடுப்பு படகுகளும் என மொத்தம் 180 படகுகள் உள்ளன.
வருடந்தோறும் படகு இல்லத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால், நுழைவு கட்டணம் மூலம் ரூ.2 கோடியும், படகு சவாரி மூலம் ரூ.5 கோடி வருமானமும் கிடைக்கிறது. மேலும் படகு இல்லத்தில் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு உள்ள ஓட்டல்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.1½ கோடி தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வருமானமாக கிடைக்கிறது. ஊட்டி படகு இல்லம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கும் சுற்றுலா தலமாக உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
குறைந்தபட்சம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.8½ கோடி வருமானம் கிடைத்தாலும், படகு இல்லம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நடவடிக்கை எடுக்காததே ஆகும். ஊட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக, கோடப்பமந்து கால்வாயில் வெள்ளம் வந்தது. அப்போது பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சாக்கடை கழிவுநீர் ஊட்டி ஏரிக்குள் கலந்தது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள இரும்பு தடுப்புகள் உடைந்து இருந்ததால், பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் ஊட்டி ஏரிக்குள் கலந்து விட்டன. அதன் காரணமாக ஏரியின் ஒரு பகுதியில் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளாகவே காட்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுநீரால் ஏரியின் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து உள்ளது.
ஏற்கனவே ஏரியில் உள்ள பல்வேறு அரிய வகை மீன் இனங்கள் அழிந்து விட்டன. இந்த நிலையில் ஏரியின் தற்போது உள்ள நிலைமையை பார்த்தால், கழிவுநீர் காரணமாக போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இருக்கிற மீன்களும் இறக்கும் அபாயம் உள்ளது. மேலும் சவாரியின் போது படகுகள் பிளாஸ்டிக் கழிவுகளால் சிக்கி கொள்ளும் நிலை உள்ளது.
அதனை தொடர்ந்து ஊட்டி ஏரி மற்றும் படகு இல்லத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் எந்தவித வளர்ச்சி பணிகளும் மேற்கொள்வில்லை. அதன் காரணமாக ஏரியில் நீர் மாசடைவது மட்டுமல்லாமல், இயற்கையின் அழகும் அழிந்து வருகிறது.
ஊட்டி படகு இல்லம் மூலம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஆண்டுதோறும் நகராட்சிக்கு வழங்கலாம். அந்த நிதி மூலம் ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் வரும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுநீரை சுத்தம் செய்து மீண்டும் படகு இல்லத்திற்கு நகராட்சி வழங்குவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
தற்போது ஊட்டி படகு இல்லத்தை மேம்படுத்த மலைப்பகுதி பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி அரசு ஒதுக்கி உள்ளதாக தெரிகிறது. ஆகவே இதனை பயன்படுத்தி, நவீன தொழில்நுட்ப நீர் மேம்பாட்டு வல்லுனர்களை கொண்டு பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சி ஆகிய 3 துறைகளும் கூட்டாக இணைந்து விரைவாக ஊட்டி படகு இல்லத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.