ரெயில் விபத்துகளில் சிக்கி கடந்த 22 நாட்களில் 194 பேர் பலி
மும்பையில் மின்சார ரெயில்சேவை பொதுமக்களின் உயிர்நாடியாக கருதப்பட்டு வருகிறது. தினமும் 75 லட்சம் மக்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர்.;
மும்பை,
மும்பையில் மின்சார ரெயில்சேவை பொதுமக்களின் உயிர்நாடியாக கருதப்பட்டு வருகிறது. தினமும் 75 லட்சம் மக்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் கூட்டநெரிசல், தண்டவாளத்தை கடந்து செல்லுதல் போன்ற காரணங்களால் தினமும் சராசரியாக 10 பேர் ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த உயிர் இழப்புகளை தடுக்க ரெயில்வே துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் உயிர் இழப்புகள் குறைந்தபாடில்லை.
இதில், கடந்த 22 நாட்களில் மட்டும் மும்பையில் மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம், மேற்கு ரெயில்வே பகுதியில் நடந்த ரெயில் விபத்துகளில் 194 பேர் பலியாகி உள்ளனர்.