முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்: 7,511 பேர் போட்டி தேர்வு எழுதினர்
நாமக்கல் மாவட் டத்தில் நேற்று நடந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற் கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வை 7 ஆயிரத்து 511 பேர் எழுதினர். இவர்களில் 10தேர்வர்களுக்கு வினாத்தாள் மாறி இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.;
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங் களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு நேற்று நடைபெற்றது.நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத் தேர்வினை எழுதுவதற்கு 7 ஆயிரத்து 944 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 433 பேர் தேர்வு எழுத வரவில்லை. 7,511 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இத்தேர்வினை சிறப்பாக நடத்திட 4 வழித்தட அலுவலர்கள், 21 முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 21 துறை அலுவலர்கள், 21 கூடுதல் துறை அலுவலர்கள், உடல் பரிசோதகராக 84 ஆசிரியர்கள், 448 அறை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 620 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல் நிலைப் பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா, நாமக்கல் உதவி கலெக்டர் ராஜசேகரன், தாசில்தார் ராஜகோபால், மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன் உள்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இந்த தேர்வில் நாமக்கல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செல்லப் பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு எழுதிய 10 தேர் வர்களுக்கு அவர்களுக்கு உரிய பாடபிரிவுக்கான வினாத்தாள் மாறி இருந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிப்பாடங்களில் உள்ள வினாக்களுக்கு மட்டுமே அவர்களால் விடை எழுத முடிந்தது. இது குறித்து அவர்கள் அறை கண்காணிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தனர். பின்னர் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப் பட்டது.
இது குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர் ஒருவர் கூறியதாவது :-
இந்த தேர்வுக்கு ஆன்- லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது அவர்கள் பாடப்பிரிவை மாற்றி குறிப்பிட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் வினாத்தாள் மாறி இருக்கும் என எண்ணுகிறோம். இருப் பினும் இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு விளக்கம் அளித்து உள்ளோம். மறு தேர்வு நடத்துவது குறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.