விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி 23 டன் அரிசியில் அன்னபூஜை
விவேகானந்தரின் 115–வது நினைவு தினத்தையொட்டி 23 டன் அரிசியில் அன்னபூஜை நடந்தது.;
கன்னியாகுமரி,
சுவாமி விவேகானந்தரின் 115–வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திராவில் 23 டன் அரிசியில் அன்னபூஜை நடத்தப்பட்டது.
விவேகானந்தா கேந்திரா மற்றும் தூத்துக்குடி கிராம முன்னேற்ற திட்டம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடந்தது. கிராம முன்னேற்ற திட்டத்தை சேர்ந்தவர்கள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து 230 மூடைகளில் 23 டன் அரிசியை சேகரித்து கொண்டு வந்திருந்தனர்.
அந்த அரிசியை சிறிய மலைபோல் குவித்து வைத்து அதன்மீது அன்னபூரணி சிலையை அலங்கரித்து வைத்தனர். பின்னர், அலங்கரிப்பட்ட அன்னபூரணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அருகில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி ஆகியோரின் படங்களும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கேந்திர துணை தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேந்திர அகில பாரத பொதுச்செயலாளர் பானுதாஸ், கேந்திர பொருளாளர் அனுமந்தராவ் முன்னிலை வகித்தார். அகிலாண்டேஸ்வரி, கணேஷ், ரமீலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். ரேணுகா பாய் கேந்திர பிரார்த்தனை பாடல்களை பாடினார்.
கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் வரவேற்றார். கேந்திரத்தை சேர்ந்த நாகஜோதி குழுவினர் அன்னபூரண ஸ்தோத்திரம் பாடினர். சரஸ்வதி, சந்திரா ஆகியோர் பகவத் கீதையை தமிழிலும், கேந்திர ஆயுள்கால ஊழியர் தீஷார்த்தி, ஆசிரியை சித்ரா ஆகியோர் சமஸ்கிருதத்திலும் பாடினர். பரமகுரு நன்றி கூறினார்.