அடுத்த ஓரிரு நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்யாது வானிலை ஆய்வு மைய அதிகாரி தகவல்

அடுத்த ஓரிரு நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்யாது என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update:2017-07-05 03:52 IST

மும்பை,

அடுத்த ஓரிரு நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்யாது என வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீர் மட்டம் உயர்வு

மும்பையில் கடந்த மாதம் மழைக்காலம் தொடங்கியது. கடந்த மாத தொடக்கத்தில் மும்பையில் சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. எனினும் 20–ந் தேதிக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக மாத கடைசி நாட்களில் நகர் முழுவதும் அடை மழை பெய்தது. இதேபோல மும்பைக்கு குடிநீர்வழங்கும் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளைவிட ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இது மும்பை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பலத்த மழை பெய்யாது

இந்தநிலையில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு மும்பையில் பலத்த மழை பெய்யாது என வானிலை ஆய்வு மைய தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து மும்பையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி அஜய் குமார் கூறும்போது:–

சவுராஸ்டிரா பகுதியில் உண்டான காற்றழுத்த தாழ்வுநிலையால் மும்பையில் பலத்த மழை பெய்தது. தற்போது அந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவிழந்து உள்ளது. எனவே அடுத்த சில நாட்களுக்கு மும்பையில் பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்