ஓசூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு
ஓசூர் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு;
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே படுதேபள்ளி கிராமம் உள்ளது. இங்கு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறம் வரலாற்று ஆய்வு மைய குழுவின் தலைவர் அறம்கிருஷ்ணன் தலைமையில் மஞ்சுநாத், பிரியன், சிவகுரு, வெங்கடாசலபதி ஆகியோர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில், 13-ம் நூற்றாண்டை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட நடுகற்களும், பழமையான கோட்டை சுவர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சிறிது தொலைவில் ஒரு கோட்டையின் நுழைவு வாயிலும், இடிந்து விழும் நிலையில் உள்ள மண்ணால் ஆன கோட்டை சுவர்களும், 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பெருமாள் கோவிலும், பாறையில் தெலுங்கு மொழியில் செதுக்கப்பட்ட 6 வரி கொண்ட கல்வெட்டும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.