மாணவ-மாணவிகள் நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்தினால் தங்களது இலக்கை அடைய முடியும்
மாணவ-மாணவிகள் நூலகத்தை அதிக நேரம் பயன்படுத்தினால் தங்களது இலக்கை அடைய முடியும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.;
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டி விழிப்புணர்வு வாரத்தையொட்டி, வாழ்க்கைத் தொழில் வழிகாட்டி விழிப்புணர்வு ஊர்வலம், கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை கலெக்டர் சிவஞானம் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியில் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதலாவது வாரம் வாழ்க்கைத் தொழில் வழிகாட்டி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. மாணவர்கள் கல்வி கற்கும்போதே தங்களின் எதிர்காலத்தை தீர்மானித்துக்கொண்டு அதற்கு ஏற்ப திட்டங்களை வகுத்துக்கொள்வதற்கு இதுபோன்ற கருத்தரங்கம் உதவியாக இருக்கும்.
போட்டித்தேர்வுகளுக்கான புத்தகங்கள் கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையிலும், எவை எவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும், அவற்றை எந்தமுறையில் கற்க வேண்டும் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நூலகத்தை அதிக நேரம் மாணவ-மாணவிகள் பயன்படுத்தினால் தங்களது இலக்கை எளிதாக அடைந்திட முடியும். மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் எண்ணற்ற உதவிகளை செய்து வருகிறது. உயர்கல்வி கற்பது, நேர்முகத் தேர்வு, போட்டித்தேர்வுகளை எவ்வாறு எதிர் கொள்வது, அரசு மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பு பற்றியும், சுய தொழில்கள் பற்றியும் சந்தேகங்கள் இருப்பின் இந்த கருத்தரங்கில் கேட்டறிந்து எதிர்காலத்தில் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள மாணவர்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதைதொடர்ந்து நடந்த கருத்தரங்கில் மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்பு, போட்டித்தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளை எதிர் கொள்ளும் அணுகுமுறை, தன்னம்பிக்கை வளர்த்தல், சுயவேலை வாய்ப்பு, வங்கி கடன் உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் ராணுவத்தில் வேலை வாய்ப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் சம்பந்தப்பட்ட வல்லுனர்களால் விரிவாக எடுத்துரைக்கபட்டது.
மேலும் கண்காட்சியில் மாணவ-மாணவிகள் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் எவ்வாறு பதிவு செய்வது, வேலைவாய்ப்பு அட்டையை புதுப்பித்தல் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
கருத்தரங்கில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராமநாதன், எஸ்.பி.கே.கல்லூரி செயலாளர் சங்கரசேகரன், மண்டல இணை இயக்குனர்(வேலைவாய்ப்பு) அனுசுயா செல்வி, எஸ்.பி.கே.கல்லூரி முதல்வர் முத்துச்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி உள்பட மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.