பைகுல்லா பெண்கள் சிறையில் இருந்து இந்திராணி முகர்ஜியை வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்பு
பைகுல்லா பெண்கள் சிறையில் இருந்து இந்திராணி முகர்ஜியை வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.;
மும்பை,
பைகுல்லா பெண்கள் சிறையில் இருந்து இந்திராணி முகர்ஜியை வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறையில் வன்முறைமும்பை பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி மஞ்சுளா கடந்த 23–ந் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து கைதிகள் சிறை வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறையை ஷீனா போரா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இந்திராணி முகர்ஜி தூண்டிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் வன்முறை சம்பவத்தின் போது சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தன்னை தாக்கியதாக இந்திராணி முகர்ஜி போலீசில் புகார் அளித்தார். மேலும் கைதி மஞ்சுளா கொலை வழக்கில் சிறை காவலர்களுக்கு எதிராக முக்கிய சாட்சியாகவும் உள்ளார்.
வேறு சிறைக்கு மாற்றம்எனவே அவர் தொடர்ந்து பைகுல்லா பெண்கள் சிறையில் இருப்பது பாதுகாப்பாக இருக்காது என சி.பி.ஐ. கருதுகிறது. எனவே அவர் பைகுல்லா சிறையில் இருந்து வேறு சிறைக்கு விரைவில் மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது.
மும்பை ஆர்தர் ரோடு சிறையில் பெண்களுக்கு என தனி சிறைகள் கிடையாது. எனவே அவர் தானே மத்திய சிறைக்கு மாற்றப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.