பைகுல்லா பூங்கா நுழைவு கட்டண உயர்வு மாநகராட்சி இறுதி ஒப்புதல்
பைகுல்லா பூங்கா நுழைவு கட்டண உயர்விற்கு மாநகராட்சி இறுதி ஒப்புதல் அளித்து உள்ளது. ரூ.5–யில் இருந்து 50 ஆனது நாட்டிலேயே முதல் முறையாக மும்பை பைகுல்லா ராணி பூங்காவில் பென்குயின் பறவைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை காண நாள்தோறும் ஆயிர;
மும்பை,
பைகுல்லா பூங்கா நுழைவு கட்டண உயர்விற்கு மாநகராட்சி இறுதி ஒப்புதல் அளித்து உள்ளது.
ரூ.5–யில் இருந்து 50 ஆனதுநாட்டிலேயே முதல் முறையாக மும்பை பைகுல்லா ராணி பூங்காவில் பென்குயின் பறவைகள் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பூங்காவிற்கு வருகின்றனர். இந்தநிலையில் பூங்கா நுழைவு கட்டணத்தை ரூ.5–யில் இருந்து ரூ.100 ஆக அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து பைகுல்லா பூங்கா நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 கட்டணமாக வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.
இதேபோல நடைபயிற்சிக்கு மாதத்திற்கு ரூ.150, புகைப்படம் எடுக்க ரூ.100, வீடியோ எடுக்க ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இறுதி ஒப்புதல்இந்த கட்டண உயர்வு முடிவிற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்த போதும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் சம்மதம் தெரிவித்தது. கடந்த மாதம் பைகுல்லா பூங்கா நுழைவு கட்டண உயர்விற்கு மாநகராட்சி நிலைக்குழு ஒப்புதல் அளித்து இருந்தது. இந்தநிலையில் இந்த கட்டண உயர்வு முடிவிற்கு மாநகராட்சி பொதுக்குழு இறுதி ஒப்புதல் அளித்து உள்ளது.
இதனால் கட்டண உயர்வு விரைவில் அமலுக்கு வருகிறது. புதிய டிக்கெட் அச்சிடப்பட்ட பிறகு டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.