மும்பை விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ டாக்சி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தம்
மும்பை விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ டாக்சி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ‘பிரீபெய்டு’ டாக்சிகள் மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ‘பிரீபெய்டு’ டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய வளாகத்தில் டாக்சிகளை நிறுத்தி வ;
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ டாக்சி டிரைவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
‘பிரீபெய்டு’ டாக்சிகள்மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ‘பிரீபெய்டு’ டாக்சிகள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலைய வளாகத்தில் டாக்சிகளை நிறுத்தி வைப்பதற்காக ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தின் தற்போதைய அளவை விமான நிலைய நிர்வாகம் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு டாக்சி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திடீர் வேலை நிறுத்தம்இந்தநிலையில், விமான நிலைய நிறுவனத்தின் முடிவை கண்டித்து நேற்று திடீரென ‘பிரீபெய்டு’ டாக்சி டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் குதித்தனர். அவர்கள் விமான நிலைய வளாகத்தில் திரண்டு விமான நிலைய நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
‘பிரீபெய்டு’ டாக்சி டிரைவர்கள் போராட்டம் காரணமாக டாக்சிகளை பதிவு செய்வதும் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்தில் ‘பிரீபெய்டு’ டாக்சிகளை நம்பி வந்த பயணிகள் பலரும் பாதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்சினை தொடர்பாக டாக்சி யூனியன் சங்கத்தை சேர்ந்தவர்கள் விமான நிலைய நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.