தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து 18-ந்தேதி சாலை மறியல் போராட்டம்
எருக்கூரில் தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து வருகிற 18-ந்தேதி சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.;
சீர்காழி,
நாகை மாவட்டம், சீர்காழி அருகே எருக்கூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தனியார் பஸ்கள் எதுவும் நின்று செல்வதில்லை. இதனால் இங்கிருந்து எருக்கூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எருக்கூரை சேர்ந்த கிராம மக்கள் வருகிற 18-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து சீர்காழி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் தாசில்தார் பிரேமசந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் காஞ்சி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் ராதாகிருஷ்ணன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தனியார் பஸ் உரிமையாளர்கள், எருக்கூர் கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சீர்காழியில் இருந்து சிதம்பரம் செல்லும் 28 தனியார் பஸ்கள், எருக்கூர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும். அவ்வாறு நிற்காமல் சென்றால் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மீது நடவடிக்கை எடுப்பது. எருக்கூரில் நிற்காமல் செல்லும் பஸ்களின் அனுமதி சான்றை ரத்து செய்ய கலெக்டருக்கு பரிந்துரை செய்வது. எருக்கூர் மார்க்கமாக செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்களின் கால நேர அட்டவணையை எருக்கூர் பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில் எருக்கூரில் தனியார் பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து வருகிற 18-ந்தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.