பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணம் கொள்ளை
தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
தாம்பரம்,
தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு சுந்தரம் (வயது 30) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சுந்தரம் பணியில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல், திடீரென சுந்தரத்தை கத்தியால் வெட்டினர். உடனே அவர் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
அந்த பையில் ரூ.12 ஆயிரம் இருந்தது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணத்துடன் தப்பிய 6 பேரை தேடி வருகின்றனர். ஊழியர் சுந்தரத்திற்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.