ஆதிதிராவிட மக்களின் வளர்ச்சிக்காக மாநில அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் டவுனில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாபு ஜெகஜீவன்ராம் பவனை நேற்று முன்தினம் சமூகநலத்துறை மந்திரி ஆஞ்சநேயா திறந்து வைத்தார்.;

Update:2017-07-10 03:45 IST

கெள்ளேகால்,

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாநில அரசு ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு அன்னபாக்ய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. இதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடி மாணவ–மாணவர்களின் கல்விக்காக உண்டு, உறைவிட பள்ளிகளை மாநில அரசு தொடங்கி வருகிறது. இதேபோல் ஆதிதிராவிடர், பழங்குடியிட மக்களின் வளர்ச்சிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியை ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு ஒதுக்கி வருகிறது.

மேலும் ஆதிதிராவிடர், பழங்குடியின பெண்களின் திருமணத்திற்காக அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. ஹனூர் தாலுகாவில் துருவநாராயண் எம்.பி. தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடந்த 3 ஆண்டுகளில் பல வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். குறிப்பாக ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துருவநாராயண் எம்.பி. மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்