7-வது ஊதியக்கமிட்டி அறிக்கையை வெளியிடக்கோரி கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
7-வது ஊதியக்கமிட்டி அறிக்கையை வெளியிடக்கோரி கிராம தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்;
தஞ்சாவூர்,
அகில இந்திய கிராம தபால் ஊழியர்கள் சங்க தஞ்சை கோட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். செயலாளர் செபஸ்டின், பொருளாளர் கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆலோசகர்கள் ஜெயராமன், சாகுல்அமீது ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 7-வது ஊதியக்கமிட்டி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. ஆனால் மத்திய அரசு தேவையற்ற காலதாமதம் செய்து வருகிறது. எனவே ஊதியக்கமிட்டி அறிக்கையை உடனே வெளியிடக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், குடியரசு, பண்டரிநாதன், கருப்பையன், உதயக்குமார், முத்தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.