மாவட்ட செய்திகள்
மண்ணிவாக்கம் ஊராட்சியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்

தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள அரசு இடத்தில் கொட்டி வைத்து இருந்தனர்.
வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மண்ணிவாக்கம் ஊராட்சியில் பல்வேறு பகுதியில் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தால் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளை மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் உள்ள அரசு இடத்தில் கொட்டி வைத்து இருந்தனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளுக்கு பல்வேறு விதமான நோய்கள் பரவும் ஆபத்து இருந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் குப்பைகளை அகற்ற தொடர்ந்து மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து மண்ணிவாக்கம் ஊராட்சி செயலாளர் ராமபக்தன் தலைமையில் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை லாரி மூலம் ஏற்றி சிங்கபெருமாள்கோவில் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மண்ணிவாக்கம் ஊராட்சியில் நீண்ட காலமாக அகற்றப்படாமல் இருந்த குப்பைகள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.